ஆத்மா – ஒரு இசைத் தொகுப்பு
ஜூலை 17, 2007 at 12:00 பிப பின்னூட்டமொன்றை இடுக
இசை மன இறுக்கத்தை தளர்த்துகிறது- கோபதாபங்களை தடுகிறது. உற்சாகத்தை உண்டாக்குகிறது. இரத்த அழுத்தத்தை அமைதிப்படுத்துகிறது. சிந்தனை தெளிவு உண்டாக்குகிறது. நோய்களை தீர்க்கிறது. உயிர் அணுக்கள் வளர இசை உதவுகிறது, என்று அறிவியல் மேதைகள் தங்கள் அனுபவத்தில் சொல்கிறார்கள்.
நான் தினமும் கேட்கும் இசைத்தொகுப்பைப் பற்றி இங்கு உங்களுக்கு சொல்கிறேன். மகாகவி பாரதியின் சில பாடல்கள் “ஆத்மா” தொகுப்பில் வெளிவந்துள்ளன (2000-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது). பாம்பே ஜெயஸ்ரீ அனைத்து பாடல்களையும் அழகாக பாடியுள்ளார். சுரேஷ் கோபாலன் மற்றும் சபேஷ் ஆகியோர் இந்த தொகுப்பிற்கு இசை அமைத்துள்ளனர். பாரதியாரின் பாடல்களான “அக்னி குஞ்சு” , “மனதில் உறுதி வேண்டும்” போன்ற பாடல்களை வெகு வேகமான இசையில் தான் நான் கேட்டிருக்கிறேன். இந்த தொகுப்பில் மிகவும் மென்மையாக, வித்தியாசமானதாக (முக்கியமாக ரசிக்கக் கூடிய) அளித்திருக்கிறார்கள். அதே போல், “சுட்டும் சுடர்விழிதான்..”, “நல்லதோர் வீணை” போன்ற பாடல்களை ரொம்பவும் மெதுவாக ஊர்ந்து செல்லும் நடையில் கேட்டிருக்கிறேன். இந்த தொகுப்பிலோ, இவ்விரண்டு பாடல்களும் மிகவும் மென்மையாக, ஒரு தாலாட்டினைப் போல் இருக்கிறது. மிகவும் அருமை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது “மழை” என்ற பாடல்தான். ஒன்றரை நிமிடம் தான் வந்தாலும் கேட்டவுடன் தாளம் போட வைக்கும் பாடல் அது. பாம்பே ஜெயஸ்ரீயின் குரல் அப்படியே நம்மை கட்டிப்போட்டுவிடுகிறது. மிகவும் வித்தியாசமான அனுபவம்.
“To look through his eyes, close your own. Open your heart. And allow him to touch Your soul … your atma”
இணையத்தில் download செய்ய: http://www.tamilbeat.com/tamilsongs/devo/atma/
Entry filed under: இசை.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed