புகைப்பட வரிசை
நெசமாலுமே நிலா தானுங்க…
புகைப்பட போட்டிக்கான படங்கள்
அப்பாடி ஒரு வழியா படம் காட்டியாச்சு….
வரம் கேட்கிறேன்
வரம் கேட்கிறேன்!
வேறென்ன கேட்பேன்
பராசக்தி!
வில்லங்கம் எதுவுமில்லா
காணி நிலம்
அதில்
தீப்பிடிக்காத
ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை!
அடைப்பில்லாத
ட்ரைனேஜ் கனெக் ஷன்!
வைரஸ் வராத
கம்ப்யூட்டர்
விளையாடி மகிழ
வெப்சைட்
சரியான முகவரியோடு
எலெக் ஷன் கார்டு
பக்கவிளைவில்லா
பாஸ்ட் புட் அயிட்டங்கள்
மறக்காமல் கொஞ்சம்
மினரல் வாட்டர்!
வேறென்ன கேட்பேன்
பராசக்தி
இவை யாவும் தரும் நாளில்
அதிர்ச்சியில்
இறக்காமல் இருக்க
கொஞ்சம் ஆயுள்.
எம்.ஜி.கன்னியப்பன் – என் நந்தவனத்துப் பட்டாம்பூச்சிகள்
அட இப்படியும் கவிதை எழுத முடியுமா!…
உசேலே உசேலே…
இந்த பாடல் ஆல்பமாக வெளிவந்த போது நான் பெரும்பாலும் இதை தான் கேட்டுக்கொண்டிருப்பேன். இது பழைய ராமராஜன் படத்தில் வரும் ‘சொர்க்கமே என்றாலும் அது நம்ம் ஊர் போல வருமா’ என்ற பாடலை நினைவுப்படுத்துகிறது. இப்போதுள்ள fast beat, புது பாடகர்கள் எல்லாம் சேர்த்து மிகவும் அருமையாக பாடியிருக்கிறார்கள். நீங்களும் கேட்டுப் பாடி பாருங்கள்.
|
உசேலே உசேலே…
உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே
மாட்டு மணிச் சத்தம்
மல்லிகைப்பூவாசம்
கைத்தறி கண்காட்சி
சந்தக் கடைவீதி
தென்னஞ்சோலை
தெருவில் பள்ளம்
மண்ணுச்சாலை
மூங்கில் பாலம்
மூக்குத்திப்பூ முந்தானைகள்
மேளச் சத்தம் வாசக்கோலம்
இல்ல இது இல்ல வெளிநாட்டில் இது இல்ல
வெள்ள வெறும் வெள்ள மாநிறமே அங்கு இல்ல
உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே
பூ உண்டு பூ உண்டு ஆளான பெண் உண்டு
பூ சூடும் பெண் இல்ல ஃபாரினுல
பாவாடை தாவணி குங்குமம் கால் மெட்டி
பார்த்துட்டே வாழலாம் நம்மூருல
நம்மோட நெழலும் தான் சாலை மேல் விழுதுன்னா
அபராதம் கேக்குறான் ஃபாரினுலே
தாம்பூலம் போட்டுட்டு எங்கேயும் தூவலாம்
கேட்பாரே இல்லயே நம்மூரூல
உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே
நம்மூரு வண்டி வச்சு வண்டி பூரா உட்கார்ந்து
உண்ணும் சுகம் அடடா
வேகாத ரொட்டி வெச்சு வேளைக்கு ரெண்டு
திண்பான் ஃபாரினுல ஐயையோ
ஆண்டிப்பட்டியில் சேவல் சண்டைக்கு
ஃபாக்ஸிங் ஈடில்லையே
உசேலே உசேலே ஏரிக்கரை உசேலே
உசேலே உசேலே எங்கும் பச்சை பசேலே
சைக்கிள் பெல்லின் சங்கீதம்
மொட்டைமாடி காற்றாடி
ஓட்டுப் பள்ளிக்கூடங்கள் இன்பம் இன்பம்
கம்புச்சண்டை கரகாட்டம்
கோயில் குளம் கற்பூரம்
பொங்கல் தல தீபாவளி இன்பம் இன்பம்
தண்ணிக் கொடம் சண்டையும்
பானை மோரும் பண்ணீரும்
ஜன்னலில்லா பேருந்தும் இன்பம் இன்பம்
தென்னஞ்சோலை
தெருவில் பள்ளம்
மண்ணுச்சாலை
மூங்கில் பாலம்
மூக்குத்திப்பூ முந்தானைகள்
மேளச் சத்தம் வாசக்கோலம்
இல்ல இது இல்ல வெளிநாட்டில் இது இல்ல
வெள்ள வெறும் வெள்ள மாநிறமே அங்கு இல்ல
நம்ம ஊரு ஈடேல்ல எங்கும் பச்சைப்பசேலே
நம்ம ஊரு ஈடேல்ல எங்கும் பச்சைப்பசேலே
எங்கும் பச்சைப்பசேலே
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
உசேலே உசேலே…
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
உசேலே உசேலே நம்ம ஊரு ஈடேல்ல
ஆல்பம் : உசேலே
பாடல் : உசேலே உசேலே
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ், டிம்மி, கார்த்திக் & திப்பு
பாடல் வரிகள் : பா.விஜய்
காபி உஷார்
தினமும் இரண்டு டம்பர் அல்லது அதற்கு மேல் காஃபி குடிப்பது தாய்மை நிலையிலிருப்பவர்களை வெகுவாகப் பாதிக்கிறது. கருச்சிதைவு ஏற்படக் கூடிய வாய்ப்பை அது இரண்டு மடங்காக அதிகரிக்கிறது என்னும் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக கருவுற்ற முதல் சில மாதங்கள் தொடர்ந்து இரண்டு கப் காஃபி குடித்து வருவது கருச்சிதைவு ஆபத்தை அதிகரிக்கும் என்று இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
வெறும் காஃபி என்று மட்டுமில்லாமல் காஃபைன் மூலக்கூறு உள்ள எந்த ஒரு பொருளை உண்பதும் ஆபத்தானதே என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். குளிர்ந்த காப்பி, பெப்சி கோக் போன்ற குளிர்பானங்கள், டீ, சில வகை சாக்லேட்கள் போன்றவற்றிலும் காஃபைன் இருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.
இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் அதிக அளவில் காஃபைன் உட்கொள்வது அங்கே ஆண்டுதோறும் நிகழும் 2,50,000 கருச்சிதைவுகளுக்கான காரணமாய் இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஐந்துக்கு ஒன்று என்னும் விகிதத்தில் அங்கே கருச்சிதைவுகள் நிகழ்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.
மருத்துவர் டி-குன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தாய்மை நிலையில் இருப்பவர்களும், தாய்மை நிலையை அடைய முயல்பவர்களும் காஃபியை முற்றிலும் விலக்கி விடுவதே நல்லது என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
காஃபைன் என்னும் பொருள் கருவுக்குச் செல்லவேண்டிய இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
இதுவரை சுமார் பதினைந்து ஆராய்ச்சி முடிவுகள் காப்பி அருந்துவதற்கும், கருச்சிதைவுக்கும் இடையே தொடர்பு இருப்பதை விளக்கியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
நிர்வாண பயணம்
நிர்வாண விமானப் பயணத்திற்கு கிழக்கு ஜெர்மனியிலுள்ள விமான நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறது.
கிழக்கு ஜெர்மனியிலிருந்து பால்டிக் கடற்கரை வரை செல்லும் இந்தப் பயணத்தில் பயணிகள் அனைவரும் நிர்வாணமாகப் பயணிக்கலாம் என உற்சாக அழைப்பு விடுத்திருக்கிறது அந்த நிர்வாணம் மன்னிக்கவும் நிறுவனம்.
விமானத்தில் ஏறும் வரை உடை அணிந்து வரவேண்டும் என்றும், விமானத்திற்குள் வந்தபின் உடை களைந்து நிர்வாணமாக திரியலாம் எனவும் , செல்லுமிடம் சென்று சேர்ந்தபின் மீண்டும் உடை அணிந்து கொண்டு விமானத்திலிருந்து இறங்க வேண்டும் எனவும் “ஒழுங்கு” முறை வரையறுக்கப்பட்டுள்ளது.
ஐம்பத்து ஐந்து பேர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்யக் கூடிய இந்த விமானத்துக்கான முன்பதிவு துவங்கி விட்டதாம். ஜூலையில் பயணமாம் !
நேச்சுரிசம் எனப்படும் நிர்வாண விரும்பிகள் கிழக்கு ஜெர்மனியில் அதிகம். நாசிகளால் தடை செய்யப்பட்டு, இரண்டாம் உலகப் போருக்குப் பின் மீண்டும் அந்த எண்ணம் கிளர்ந்து எழுந்திருக்கிறது.
நிர்வாணமாய் அமர்ந்து உணவு உண்ணும் சிறப்பு உணவகங்கள் கூட கிழக்கு ஜெர்மனியில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
இப்போது நிர்வாண விமானப் பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த யோசனையைச் சொன்னதே ஒரு வாடிக்கையாளர் தான் என்கின்றனர் நிறுவனத்தினர்.
ஆனால் ஒன்று, பயணிகள் மட்டும் தான் நிர்வாணமாக, விமானப் பணிப்பெண்களும், பணியாளர்களும், பைலட்டும் – உடையுடன் !!! ( சிவ பூஜையில் கரடி ?)
என் முதல் டிஜிட்டல் கேமிரா
நான் வெகு நாளாக டிஜிட்டல் கேமிரா(தமிழில் என்னப்பா!!!) வாங்க வேண்டும் என்ற எண்ணம் சமீபத்தில் நிறைவேறியது. போன வாரம் நான் வாங்கியது Sony DSC-H3 மாடல்.
சுடுதேங்காய்
தேவையான பொருட்கள்
1. குடுமியுடன் ஒரு நல்ல தேங்காய்
2. பொட்டுக்கடலை – ஒரு பிடி
3. வெல்லம் – ஒரு பிடி
4. கற்கண்டு – அரை பிடி
5. அவல் – ஒரு பிடி
6. முந்திரி பருப்பு – அரை பிடி
7. டம்ளர் -1, ஸ்பூன் – 1
8. தீப்பெட்டி, காய்ந்த குச்சிகள், இலை, மரத்தடி, நண்பர்கள் (optional)
செய்முறை:
முதலில் தேங்காயின் குடுமியை பிடுங்க வேண்டும். இது ரொம்ப ஈஸி. முக்கோண வடிவத்தில் மூன்று கண்கள் தெரியும். அதில் ஒரு கண்ணை ஸ்பூனின் பின் பக்கத்தால் நன்றாக நோண்டி துளை போடுங்கள். பின்பு அதன் வழியாக இளநீரை டம்ளரில் சேகரித்து வையுங்கள். மேற்சொன்ன தேவையான பொருட்கள் (கடைசி இரண்டை தவிர) எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக துளை வழியே உள்ளே தள்ளுங்கள். டம்ளரில் சேகரித்த இளநீரையும் அதனுடன் சேருங்கள். இப்போது முன்பு பிய்த்த தேங்காயின் குடுமியை திருப்பி அதன் துளையை நன்றாக அடையுங்கள்.
மரத்தடியில் கொஞ்சம் காய்ந்த இலை, குச்சிகள் போன்றவற்றை பற்ற வைத்து அதில் தேங்காயை தலைகீழாக போடவும். சிறிது நேரத்தில் அருமையான வாசனை வரும். பொறுங்கள். தேங்காயின் மேல் ஓடு கறுப்பான உடன் நெருப்பில் இருந்து எடுத்து விடலாம். சூடு தணிந்த பின் உடைத்து சாப்பிட வேண்டியது தான். அதன் சுவையை வர்ணிக்க முடியாது.
குறிப்பு: காஸ் அடுப்பு,மைக்ரோ வேவ் போன்றவற்றில் இதை சமைக்க முடியாது.
நன்றி: தேசிகன்